×

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவு: அதிக சுனாமி எச்சரிக்கை விடுப்பு

டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரபட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவாகியுள்ளது. ஹேன்சு அருகே அடுத்தடுத்து சக்திவந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் ஹேன்சு அருகே 13 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவாகியுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.2 ரிக்டர் வரை அடுத்ததடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகோ பகுதிகளில் அதிக சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி தாக்ககூடும் என எச்சரிக்கை விடுக்கபட்டது.

நலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் வீடுகளில் இருந்து ஜப்பான் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

The post ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவு: அதிக சுனாமி எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Japan ,Tokyo ,of ,Hansu ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்